பல்லடம் அருகே விபத்து! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய மூன்று கார்கள்1603619979
பல்லடம் அருகே விபத்து! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய மூன்று கார்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னாள் வேகமாக வந்த சொகுசுக்கார் சரக்கு வாகனத்தின் இடது புறம் முந்தி செல்ல முயன்றது. அப்போது சரக்கு வாகனத்தின் மீது கார் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையின் எதிர்புறம் பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் மோதிய கார் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பகுதியில் வந்து நின்றது. அப்போது எதிரே வந்த இரு கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் மூன்று கார்களும் அப்பளம் போல் நொருங்கியது. மேலும் காரை ஓட்டிவந்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் கார் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டுருந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத...