வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என இந்தியவானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று ( மார்ச் 20ம்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (மார்ச் 21-ம் தேதி) ஆசானி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரையை மார்ச் 22 அன்று அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் - நிகோபார் தீவுகளில் கனமழையும் நிகோபார் தீவின் சில பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யும் என்று தெரிவ...