மொத்தத்தில் பீஸ்ட் தீப்பிடிக்க வில்லை! பீஸ்ட் திரைவிமர்சனம்!
மொத்தத்தில் பீஸ்ட் தீப்பிடிக்க வில்லை! பீஸ்ட் திரைவிமர்சனம்! மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய், நெல்சன் இயக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வந்தது. அதன் பிறகு வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, இதனால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பூஜா ஹெக்தே, செல்வராகவன் என முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கும் விஜய் மற்றொரு நாட்டில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. அதனால் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார். எதிர்பாராதவிதமாக ஒரு வணிக வளாகத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்ய அதனுள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை. படத்தின் டிரைலர் வெளியான போதே கிட்டத்தட்ட மொத்த கதையையும் சொல்லியிருந்தனர். அதே போல தான் படமும் அமைந்திருந்தது. பீஸ்ட் முதல் பாதி, இரண்டா...