தமிழகத்தில் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு



சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் வலுவிழந்து மியான்மர் பகுதியில் கரையைக் கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே வெப்பமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று லேசானது மிதமான மழை பெய்தது.

அதிகபட்சமாக கொடைக்கானல் பகுதியில் 80 மிமீ, ராஜபாளையம் 60மிமீ, குன்னூர், ஆண்டிப்பட்டி 40 மிமீ, உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்தது. ஆம்பூர் பகுதியிலும் நேற்று நல்ல...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…