ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றம்? வரி விலக்கு உள்ள பொருட்களுக்கு 3% வரி விதிக்க திட்டம் !!


ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றம்? வரி விலக்கு உள்ள பொருட்களுக்கு 3% வரி விதிக்க திட்டம் !!


சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் 5% வரி விழுக்காடை நீக்கிவிட்டு 3% மற்றும் 8% விழுக்காடுகளை நடைமுறைப்படுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகளை அறிமுகப்படுத்தப்பட்ட போது 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளில் வரி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன.

வரி விகிதங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 வரி விகிதங்கள் உயர்த்த முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச வரி விகிதங்களான 5% விழுக்காடு வரியினை நீக்க ஜிஎஸ்டி பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி, வரி விகிதங்கள் அளிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 3% விழுக்காடு வரி விதிக்கப்படலாம் என்ற தகவல் தெரிகிறது.

இதனிடையே 5% விழுக்காடான வரி 7% அல்லது 8% அல்லது 9% விழுக்காடாக உயர்த்தப்படலாம். மேலும், பெரும்பாலான பேக்கிங் பொருட்களில் கூடுதலாக 1% வரி விதித்தால் அரசுக்கு 50 ஆயிரம் கோடி கூடுதல் வரி கிடைக்கும். மே மாதம் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…