சிறப்பு கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !!
சிறப்பு கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !!
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, வரும் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 24- ஆம் தேதி ராஜ் தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீடித்த ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் பஞ்சாயத்து ராஜ் தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராம சபை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Topics:Special Grama Niladhari meeting, தமிழக அரசு அறிவிப்பு
Click to comment
Comments
Post a Comment