குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
தமிழகத்தில் ரேஷன் பொருட்களை பொறுத்தவரை தரமில்லை என்பது தான் மக்களின் நீண்ட நாள் புகாராக உள்ளது. உணவு பொருட்களில் புழு, பூச்சிகள் கிடப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், ரேஷன் அரிசியில் மட்டும் எந்த விதமான மாற்றமும் வருவது இல்லை என்பது தான் பொதுமக்களின் பிரதான குற்றச்சாட்டு.
இந்த சூழ்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வருகிற பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதே போல் ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் அதை ஊழியர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வாறு செய்வதில்லை. காரணம் திருப்பி அனுப்பி தங்களது உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.
இந்நிலையில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரமான அரிசியை வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள். எனவே கூட்டுறவு சங்க இணை பதிவாளர், கூட்டுறவு அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதனால் தரமான உணவு பொருட்கள் கிடைக்கும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments
Post a Comment