ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட்


ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட்


ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாலும், க்ரைம் பாணியில் கதை உருவாக இருப்பதாலும் வலிமையில் விட்டதை இருவரும் பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடி என கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி சமுத்திரகனி, ஜான் கோக்கன், கௌதம் மேனன் உதவியாளர் வீரா உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர் என தெரிகிறது.

வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாலும், அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாலும் படத்தில் பக்கா மாஸ் பேக்கேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்துவரும் ஷூட்டிங் எப்போதும் நிறைவடையும் என்பது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்றுவிடும். தற்போது வரையில் மொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது” என்றார்.

Comments

Popular posts from this blog

12 Days of Christmas Cookies 2019

World s Best Green Bean Casserole

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526