வேட்டையாடு விளையாடு படம் 2ஆம் பாகம் விரைவில்!!2023275216


வேட்டையாடு விளையாடு படம் 2ஆம் பாகம் விரைவில்!!


கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் தான் வேட்டையாடு விளையாடு. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 2ஆம் பாகம் பற்றிய தகவல் வெளியாகி கமல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினாலும், அதற்கு பிறகு இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வேட்டையாடு விளையாடு படத்தின் பார்ட் 2 குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்கான விரைவில் தொடங்க உள்ளதாக படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். எனினும், அதில் கமல் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள கெளதம் வாசுதேவ் மேனன், படம் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…