Posts

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் பிரச்சினை எங்கும் இல்லை. அனைவரையும் சகோதரத்துவத்துடனே பார்க்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Image
திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, "கடந்த, 2009ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை (RTI) அடிப்படையாக கொண்டது தான் பள்ளி மேலாண்மைக்குழு. இதுவரை கண்டுக் கொள்ளாமல் இருந்த இந்த திட்டத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். திமுக... விரிவாக படிக்க >>

கொரோனா 4ம் அலை பரவ வாய்ப்பு.. விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்: ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Image
கொரோனா 4ம் அலை பரவ வாய்ப்பு.. விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்: ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் விரைந்து அனைவரும் இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில்  நடைபெற்ற 25வது மெகா தடுப்பூசி முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர், 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர் என்றும் கூறினார். இஸ்லாமியர்கள் கல்விக் கூடங்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்துகொள்ளட்டும்- அண்ணாமலை தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அ

வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு

Image
வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என இந்தியவானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று ( மார்ச் 20ம்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,  நாளை (மார்ச் 21-ம் தேதி) ஆசானி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரையை மார்ச் 22 அன்று அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் - நிகோபார் தீவுகளில் கனமழையும் நிகோபார் தீவின் சில பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன; தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. | | |

கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image
கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளிருக்கு மாதம் ரூ.1000;எகிறும் எதிர்பார்ப்பு – தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

Image
மகளிருக்கு மாதம் ரூ.1000;எகிறும் எதிர்பார்ப்பு – தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்! சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி(இன்று) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். 2-வது பட்ஜெட்: சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: இந்நிலையில்,2022-23 ஆம்

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா!

Image
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா! இன்று காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரைக்கால் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள், திறப்பு, வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம்,  கோவில்களில் திருவிழாக்களிலும் பக்தர்கள் பங்கு பெற  அனுமதி.  அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகவே  மாசி , பங்குனி மாதங்களில்  தேரோட்டம் களை கட்டும். அந்த வகையில் நாளை காரைக்கால் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவிலில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நாளை தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  அனைத்து  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும்  அறிவித்துள்ளார்.பங்குன